×

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி மின்னொளி கால்பந்தாட்ட போட்டி: புதுக்கல்லூரியில் நாளை தொடங்கி 2 நாள் நடக்கிறது

* அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்: தயாநிதி மாறன் எம்.பி அறிவிப்பு

சென்னை: கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மற்றும் சென்னை மேற்கு மாவட்ட திமுக இணைந்து நடத்தும், 32 கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்கும் மாபெரும் மின்னொளி கால்பந்தாட்ட போட்டி, நாளை மற்றும் நாளை மறுதினம் (8 மற்றும் 9ம் தேதிகளில்) சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. இப்போட்டியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து, விழா பேருரையாற்றுகிறார். திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளரும், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன் தலைமை வகிக்கிறார். மாவட்ட செயலாளர் நே.சிற்றரசு முன்னிலை வகிக்கிறார். அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

விழாவில், மயிலாப்பூர் எம்எல்ஏ த.வேலு, அண்ணாநகர் எம்எல்ஏ எம்.கே.மோகன், ஆயிரம் விளக்கு எம்எல்ஏ நா.எழிலன், சேப்பாக்கம் பகுதி செயலாளர் எஸ்.மதன்மோகன், திருவல்லிக்கேணி பகுதி செயலாளர் ஏ.ஆர்.பி.எம்.காமராஜ், திமுக சிறுபான்மை நலப்பிரிவு தலைவர் சுபேர்கான், மாமன்ற உறுப்பினர் ஈஸ்வரி வெங்கடேசன், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநில துணை செயலாளர்கள் கவுதம் சிகாமணி, எம்பி, எஸ்.ஆர்.பார்த்திபன் எம்பி, ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்எல்ஏ, வே.நம்பி, பைந்தமிழ் பாரி, சுரேஷ் ஜெ.மனோகர், வாசிம் முபாரக், செல்வி, நிவேதா ஜெசிகா, எஸ்.கார்த்திக் மற்றும் வே.கவுதமன் உள்ளிட்ட திமுக முன்னணியினர் பங்கேற்கின்றனர். விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநில துணை செயலாளர் ஏ.ஆர்.வி.கோபால்ராம் வரவேற்புரையாற்றுகிறார். திமுக செயலாளர் ஜி.வெங்கடேசன் நன்றியுரையாற்றுகிறார்.

The post கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி மின்னொளி கால்பந்தாட்ட போட்டி: புதுக்கல்லூரியில் நாளை தொடங்கி 2 நாள் நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Pudukallur ,Minister ,Udayanidhi Stalin ,Dayanidhi Maran ,Chennai ,DMK ,
× RELATED நாகை எம்.பி. செல்வராஜ் மறைவு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல்