×

தமிழகம் முழுவதும் நவம்பர் 1ம் தேதி முதல் ஆதிதிராவிடர் நலப்பள்ளி விடுதிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: தமிழகம் முழுவதும் நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகளுடன் செயல்பட்டு வரும் விடுதிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் நல ஆணையர் மதுமதி அனைத்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு நவம்பர் 1ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் கொரோனா நிலையான வழிகாட்டு நடைமுறை பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படும். *  பள்ளி மாணவர்கள் கிருமி நாசினி கொண்டு கைகளை கழுவிய பின்னரே விடுதிக்கு வருவதையும், விடுதியில் மாணாக்கர்கள் சமூக இடைவெளியுடன் தங்கி கல்வி பயில்வதையும் காப்பாளர், காப்பாளினிகள் உறுதி செய்ய வேண்டும்.*  மாணாக்கர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை எடுத்து, அதற்குரிய பதிவேடு ஏற்படுத்தி பதிவு செய்ய வேண்டும். * மாணவர்களிடத்தில் முகக்கவசம், சமூக இடைவெளி, கிருமி நாசினிகள் பயன்படுத்துதல் குறித்து விழிப்புணர்வு வழங்க வேண்டும்.*  கொசுக்கள் உற்பத்தி ஆகாத வண்ணம் விடுதிகளில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். *  விடுதி மாணவர்கள் அவசியமின்றி விடுதியில் இருந்து தங்கள் இல்லங்களுக்கு சென்று வருவதை தவிர்க்க வேண்டும்.*  நீண்ட இடைவெளிக்கு பின்னர் மாணவர்கள் நேரடி வகுப்பில் பங்கு பெறுவதால் அவர்களை உளவியல் ரீதியாக தயார்படுத்தி எளிதில் அணுகுவதற்கு தேவையான நடவடிக்கைகள், நேர்மறை சிந்தனைகள் மற்றும் வாழ்வியல் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்த வேண்டும். தொலைக்காட்சி ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை காண உரிய ஆலோசனைகளை வழங்கி விடுதி சூழல் இனிமையானதாகவும் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் மாற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.*  விடுதிப் பணியாளர்கள் அனைவரும் 2 தவணை தடுப்பூசிகள் போடப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.nவிடுதிகளில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை அடிப்படையில் கொரோனா பெருந்தொற்று நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாணவர்களை தங்கி பயில அனுமதிக்க வேண்டும். இவற்றினை மீறி அதிகப்படியான மாணவர்களை எந்தவிதத்திலும் அனுமதிப்பதை தவிர்க்க வேண்டும்.*  ஒவ்வொரு விடுதியின் காப்பாளர், காப்பாளினிகள் அனைத்து வகையில் அவ்விடுதியில் தங்கி கல்வி பயிலும் மாணவர்கள் பாதுகாப்பிற்கு முழு பொறுப்பு வாய்ந்தவர்கள் ஆவர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post தமிழகம் முழுவதும் நவம்பர் 1ம் தேதி முதல் ஆதிதிராவிடர் நலப்பள்ளி விடுதிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Aditravidar Welappal School Hotels ,Tamil Nadu ,Chennai ,Aditravidar Welfare School Hotels ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...