×

வரும் 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்கிறது சந்திரயான்-3

சென்னை: ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து சந்திரயான்-3 விண்கலம் வரும் 14ம் தேதி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவின் புவியியலை ஆராய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் நிலவுக்கு அனுப்பபட உள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சந்திரயான்-3 விண்கலனை ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டுடன் ஒருங்கிணைத்துள்ளது. ஜிஎல்எல்வி மார்க்-3 இந்தியாவின் அதிக எடை கொண்ட ராக்கெட் ஆகும்.

தற்போது ஜிஎல்எல்வி மார்க்-3 எல்எம்வி3 என அழைக்கப்படுகிறது. வரும் 14ம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து சந்திரயான்-3 விண்கலனுடன் எல்எம்வி 3 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்த திட்டம் குறித்து இஸ்ரோ அதிகாரிகள் கூறியதாவது:

சந்திரயான்-3 திட்டம் நிலவின் தென் துருவத்தை ஆராய்வதை நோக்கமாக கொண்டுள்ளது. ராக்கெட்டின் மேல் உள்ள பேலோட் பேரிங் லேண்டர், ரோவர் ப்ராபல்ஷன் மாட்யூலுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. விண்கலம் லேண்டர், ரோவரை சுமந்து சென்று நிலவின் மேற்பரப்பில் தரையிறக்கும். இந்த திட்டத்தில் சந்திரனில் ஒரு மென்மையான தரையிறக்கத்திற்காக காத்திருக்கிறோம். திட்டம் வெற்றி பெற்றபின் நிலவின் வெற்றிகரமாக தரையிறங்கிய 4வது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும்.

The post வரும் 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்கிறது சந்திரயான்-3 appeared first on Dinakaran.

Tags : Sriharikota ,Chennai ,Satish Dhawan Space Center ,Dinakaran ,
× RELATED வானிலை முன்னறிவிப்புகளின்...