×

மாணவர்களுக்கு கஞ்சா விற்ற இருவர் சிக்கினர்

பூந்தமல்லி: வளசரவாக்கம், கோயம்பேடு ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அண்ணாநகர் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார், நேற்று முன்தினம் வளசரவாக்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வளசரவாக்கம் – ஆற்காடு சாலையில், பைக்கில் சந்தேகத்திற்கிடமாக வந்தவரை பிடித்து சோதனை செய்தபோது, சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சா இருந்தது. விசாரணையில், பம்மலை சேர்ந்த அபிபூர் ரகுமான் (28) என்பதும், இவர், கஞ்சாவை மொத்தமாக வாங்கிவந்து, வளசரவாக்கம் பகுதியில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து, கஞ்சா விற்றது தெரியவந்தது. அவரிடமிருந்து 8 கிலோ கஞ்சா, ஒரு செல்போன், பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதேபோல போலீசார், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த வாலிபரை பிடித்து விசாரித்தபோது, கஞ்சா இருப்பது தெரிந்தது. விசாரணையில், திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் பகுதியை சேர்ந்த செல்வசுதன் (19) என்பதும், இவர், கஞ்சாவை மொத்தமாக வாங்கிவந்து, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக, கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து அரை கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து போலீசார், கைது செய்யப்பட்ட அபிபூர் ரகுமான், செல்வசுதன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post மாணவர்களுக்கு கஞ்சா விற்ற இருவர் சிக்கினர் appeared first on Dinakaran.

Tags : Annagar ,Government of Tamil Nadu ,
× RELATED சென்னை கபாலீஸ்வரர் கோயில் நிலத்தில்,...