×

போலி பால் அட்டைகளை கண்டுபிடிக்க ஆவின் அதிரடி

சென்னை: ஆவின் நிறுவனம் மாதாந்திர பால் அட்டைகள் மூலம் பால் விற்பனை செய்கிறது. இந்த அட்டைகள் மூலம் பால் பாக்கெட் பெறுபவர்கள் அதற்கான தொகையை முன்கூட்டியே செலுத்த வேண்டும். அதன்படி தினமும் 6.5 லட்சம் லிட்டர் பால் விற்பனையாகிறது. இதனிடையே போலி மாதாந்திர பால் அட்டைகள் மூலம் பால் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்த போலி மாதாந்திர பால் அட்டைகளை ஒழிக்கும் வகையில், ஆரஞ்சு பால் பாக்கெட் வாங்கும் வாடிக்கையாளர்கள் இனி ரேஷன் கார்டு அல்லது வீடு வாடகை ஒப்பந்தம் போன்ற ஆவணங்களின் நகலை வழங்கிய பின்னரே மாதாந்திர பால் அட்டைகள் புதுப்பிக்கப்படும். பால் அட்டைதாரர்கள் மண்டல அலுவலகங்களுக்கு சென்று ஆவணங்கனை வழங்கி அட்டைகளை புதுப்பிக்க வேண்டும். மேலும் ஒரு ரேஷன் கார்டுக்கு ஆரஞ்சு பால் பாக்கெட் தினமும் 1 லிட்டர் மட்டுமே வழங்கப்படும்.

The post போலி பால் அட்டைகளை கண்டுபிடிக்க ஆவின் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Aa ,CHENNAI ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…