×

கரும்பு கொள்முதல் ஆதார விலை மற்றும் ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்: அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

சென்னை: கரும்பு கொள்முதல் ஆதார விலை மற்றும் ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்க ஒன்றிய மற்றும் தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கடந்த 2021-22 அரவைப் பருவத்தில் ஒன்றிய அரசு அறிவித்த 3050 ரூபாய் விலையில் தமிழக விவசாயிகளுக்கு 9.5 சர்க்கரை கட்டுமானத்திற்கு கிடைத்த தொகை 2821.25 ரூபாய் மட்டுமே. மாநில அரசாங்கம் கடந்த ஆண்டு 195 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கியது. தற்போது ஒரு குவின்டால் கரும்பிற்கு 10 ரூபாய் அறிவித்திருக்கிறது. இதனால், கரும்பு விவசாயிகள் கரும்பு பயிரிலிருந்து வெளியேறி மாற்றுப் பயிர் சாகுபடிக்கு மாறி வருகின்றனர். இதை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 42 சர்க்கரை ஆலைகளில் தற்போது 29 மட்டுமே இயங்கி வருகின்றன. போதுமான கரும்பு உற்பத்தி இல்லாமையால் பல ஆலைகள் நலிவடைந்து மூடும் சூழ்நிலையில் உள்ளது. கடந்த ஆண்டுகளில் வழங்கிய ஊக்கத்தொகை 195 ரூபாய் என்பதை உயர்த்தி 500 ரூபாயாக அறிவிக்க வேண்டும்.

The post கரும்பு கொள்முதல் ஆதார விலை மற்றும் ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்: அரசுக்கு வைகோ வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Vaiko ,Govt. CHENNAI ,VAICO ,Union ,Tamil Nadu government ,
× RELATED தமிழகம் முழுவதும் மக்களிடம் எழுச்சி...