×

உரிமம் புதுப்பிக்க ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் கடல் அரிப்பு தடுப்பு பிரிவு அலுவலகத்தில் கட்டுக்கட்டாக ரூ.2.14 லட்சம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர விசாரணை

சென்னை: சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் நீர்வளத்துறை தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. நீர்வளத்துறையின் கீழ் கடல் அரிப்பு தடுப்பு பிரிவு செயற்பொறியாளர் அலுவலகம் செயல்படுகிறது. இத்துறையின் கான்டிராக்டர்கள் இங்குதான் உரிமம் புதுப்பிக்க வேண்டும். இதற்காக ஒப்பந்ததாரர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்கள் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தனர். புகாரின்படி, நேற்று முன்தினம் மாலை 5.30 மணி முதல் திடீரென சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள நீர்வளத்துறையின் கடல் அரிப்பு தடுப்பு பிரிவு செயற் பொறியாளர் எஸ்.பாஸ்கரன் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தமிழ்மணி தலைமையில் அதிரடி சோதனை நடந்தது. இந்த சோதனையின் போது, உதவி செயற்பொறியாளர் எஸ்.பாஸ்கரன் உட்பட பலரின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விடிய விடிய சோதனை நடந்தது.

இறுதியில், உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.2,14,540 பணம் சிக்கியது. இதற்கான வரவு குறித்தும், அதற்கான ரசீதுகள் குறித்தும் உதவி செயற் பொறியாளர் எஸ்.பாஸ்கரன் மற்றும் அலுவலக உதவியாளர்கள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கணக்கில் வராத ரூ.2.14 லட்சத்தை பறிமுதல் செய்தனர். மேலும், கணக்கில் வராத பணம் குறித்து முறையாக விசாரணை நடத்த உதவி செயற் பொறியாளர் எஸ்.பாஸ்கரனை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை முடிவில் விசாரணைக்காக அழைத்து சென்றனர். நீர்வளத்துறையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.2.14 லட்சத்தை பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post உரிமம் புதுப்பிக்க ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் கடல் அரிப்பு தடுப்பு பிரிவு அலுவலகத்தில் கட்டுக்கட்டாக ரூ.2.14 லட்சம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Tags : Sea Erosion Prevention Division ,Anti-Corruption Department ,CHENNAI ,Water Resources Department ,Chepakkam Ezhilaka Complex ,Executive ,Marine Erosion Prevention Division ,Dinakaran ,
× RELATED மின்வாரிய அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை..!!