×

தண்டலம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகள் குறை தீர்க்கும் முகாம்

பெரும்புதூர்: பெரும்புதூர் ஒன்றியம், தண்டலம் கிராமத்தில் பெரும்புதூர் வருவாய் கோட்டம் அளவிலான மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு தண்டலம் ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார் தலைமை வகித்தார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் மலர்விழி முன்னிலை வகித்தார். முகாமில், பெரும்புதுார் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இம்முகாமில், 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மனுகள் அளித்தனர். இதைதொடர்ந்து 5 மாற்றுதிறனாளிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. அப்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள் குறித்து விளக்கபட்டது. மேலும், சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

The post தண்டலம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகள் குறை தீர்க்கும் முகாம் appeared first on Dinakaran.

Tags : Grievance ,Dandalam ,Perumbudur ,Dandalam village ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானை, கோலப்பொடி விற்பனை விறுவிறுப்பு