×

திற்பரப்பு- கோதையாறு- இரட்டை அருவிகளில் வெண்ணிற பால் போல் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

குலசேகரம்: கனமழை காரணமாக திற்பரப்பு- கோதையாறு மற்றும் இரட்டை அருவிகளில் வெண்ணிற பால் போல தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் பருவ மழை பெய்யாததால் வறட்சி நிலவியது. இதனால் நீரோடைகள் வரண்டுபோன நிலையில் ஆறுகளிலும் தண்ணீர் வற்றியது. ஆனால் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில் கடந்த 2 நாட்களாக பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குளுகுளு சூழல் நிலவி வருகிறது.

மழை காரணமாக ஆறுகளிலும் தண்ணீர் அதிகளவில் செல்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதியில் கனமழை பெய்து வருவதால் அங்கு நீரூற்றுகள் துளிர்விட்டுள்ளன. அவை நீரோடைகளாக பெருக்கெடுத்து மலைகளில் பாய்ந்தோடுவதால் சிறு சிறு அருவிகளும் உருவாகியுள்ளன. அவை காட்டு விலங்குகளுக்கு தாகத்தை தீர்ப்பதுடன் மலையில் உற்பத்தியாகும் முக்கிய ஆறுகளான கோதையாறு, பரளியாறில் இணைகின்றன. இதனால் கோதையாற்றின் வெள்ளநீர் குலசேகரத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

அதேபோல் கோதையாறு அருவி மற்றும் இரட்டை அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் இந்த குளுகுளு சீசனை அனுபவிப்பதற்காக சுற்றுலா பயணிகள் அதிகளவில் வர தொடங்கியுள்ளனர். மேலும் இங்கு காட்டு விலங்குகளின் சத்தம், பறைவைகளின் ரிங்காரக்குரல் என்று சுற்றுலா பயணிகளை சுண்டி இழுக்கும் பகுதியாக கோதையாறு பகுதி மாறிவிட்டது. தொடர்ந்து மழை பெய்து வருதால் கோதையாறு சுற்றுவட்டார பகுதிகளில் மேகமூட்டத்துடன், குளிர்ந்த காலநிலை நிலவி வருகிறது.

The post திற்பரப்பு- கோதையாறு- இரட்டை அருவிகளில் வெண்ணிற பால் போல் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் appeared first on Dinakaran.

Tags : Gothaiyar ,Kanyakumari… ,
× RELATED நாகர்கோவில் – கன்னியாகுமரிக்கு இரவு நேர பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுமா?