×

முன்னாள் அமைச்சர்கள் தொடர்பாக சிபிஐ விசாரிக்கும் வழக்குகள் குறித்த ஆவணங்கள் சட்ட பரிசீலனையில் உள்ளன: ஆளுநர் மாளிகை விளக்கம்..!

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் தொடர்பாக சிபிஐ விசாரிக்கும் வழக்குகள் குறித்த ஆவணங்கள் சட்ட பரிசீலனையில் உள்ளன என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அனுப்பிய கடிதத்துக்கு ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 4 பேர் மீது வழக்கு தொடர, ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று கடிதம் எழுதினார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 4 பேர் மீதும் வழக்கு தொடர ஆளுநர் உடனே ஒப்புதல் தர வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடர ஆளுநர் 10 மாதங்களாக ஒப்புதல் அளிக்காத நிலையில் ரகுபதி கடிதம் எழுதினார்.

சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீது குட்கா வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்ய கடந்த செப்டம்பர் மாதமே அரசு அனுமதி கோரியது. 10 மாதங்களாக நிலுவையில் உள்ள வழக்கு ஆவணங்கள் சட்ட பரிசீலனையில் இருப்பதாக கூறியுள்ளார் ஆளுநர். கே.வி.வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்கு தொடர அனுமதி கோரி மே 15-ல் ஆளுநருக்கு கோப்புகள் அனுப்பப்பட்டதாக சட்ட அமைச்சர் கூறியிருந்தார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அனுப்பிய கடிதத்துக்கு ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் தொடர்புடைய வழக்குகள் சிபிஐயால் விசாரிக்கப்படுகின்றன.

சிபிஐ விசாரிக்கும் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீதான வழக்கு ஆவணங்கள் சட்ட பரிசீலனையில் உள்ளன. முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கில் விசாரணை அறிக்கையை அரசு தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. ஆதாரப்பூர்வ விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டால் தான் மேல் நடவடிக்கை எடுக்க முடியும். எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்பாக எந்தக் கோரிக்கையும் மாநில அரசிடம் இருந்து கிடைக்கப் பெறவில்லை.

The post முன்னாள் அமைச்சர்கள் தொடர்பாக சிபிஐ விசாரிக்கும் வழக்குகள் குறித்த ஆவணங்கள் சட்ட பரிசீலனையில் உள்ளன: ஆளுநர் மாளிகை விளக்கம்..! appeared first on Dinakaran.

Tags : CBI ,Governor House ,CHENNAI ,AIADMK ,C.Vijayabaskar ,PV Ramana ,Dinakaran ,
× RELATED நூஹ் பலாத்கார வழக்கு 4...