×

அமர்நாத் புனித யாத்திரையில் முதல் 5 நாட்களில் 67 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்

ஸ்ரீநகர்: அமர்நாத் புனித யாத்திரையில் முதல் 5 நாட்களில் 67 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இமயமலை தொடரில் தெற்கு காஷ்மீரில் இயற்கையாக தோன்றும் அமர்நாத் பனிலிங்கத்தை வழிபட ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித பயணம் மேற்கொள்கின்றனர். காஷ்மீரின் பஹல்காம், பால்டால் ஆகிய இரு வழித்தடங்களில் பக்தர்கள் புனித பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்கின்றனர். இந்தாண்டுக்கான முன்பதிவு கடந்த ஏப்ரலில் தொடங்கியது. இதன்படி அமர்நாத் புனித யாத்திரைக்கு 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். புனித யாத்திரை கடந்த 1ம் தேதி தொடங்கியது.

ஆகஸ்ட் 31ம் தேதி முடிகிறது. கடந்தாண்டு யாத்திரையின் போது உடல்நல பிரச்சினைகளால் 42 பேர் உயிரிழந்தனர். இதை கருத்தில் கொண்டு இந்தாண்டு பக்தர்களின் உணவு வகைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் யாத்திரை மேற்கொள்ளும் பயணிகளின் வசதிக்காக பஹல்காம் மற்றும் பால்டால் வழித்தடத்தில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்தாண்டு இந்த யாத்திரையின் முதல் 5 நாட்களில் 67,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் அமர்நாத் குகை கோவிலுக்கு வருகை தந்துள்ளனர். தொடர்ந்து பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post அமர்நாத் புனித யாத்திரையில் முதல் 5 நாட்களில் 67 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Amarnath pilgrimage ,Srinagar ,Amarnath ,Himalayan ,
× RELATED ஜூன் 29 அமர்நாத் யாத்திரை தொடக்கம்