×

கனமழை எதிரொலி: புதுச்சேரிக்குட்பட்ட மாஹே பகுதியில் தொடர் கனமழையால் வீடுகளை சூழ்ந்த வெள்ளம்..!!

புதுச்சேரி: தொடர்மழையால் மாஹேவில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கேரளா மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்த நிலையில் அங்குள்ள கண்ணூர், கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டம் கடும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களுக்கு அருகே உள்ளது புதுச்சேரி மாவட்டத்துக்கு உட்பட்ட பிரெஞ்ச் ஆதிக்க பகுதியாக இருந்த மாஹே பகுதியாகும். அங்கு இன்று காலை முதல் தீவிர கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. உடனடியாக தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை படகுகள் மூலமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர். மேலும், மழையானது மிக தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் பாதிப்பான இடங்களில் தங்கியுள்ளவர்களுக்கு கூட பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்கும்படி புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், கேரளாவில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினரை மாஹே பகுதிக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளனர். கண்ணூர், கோழிக்கோடு பகுதிகளில் உள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அங்குள்ள ஆறுகள் நிரம்பி மாஹே பகுதிக்கு வரும் நிலை உள்ளது. இதனால் தொடர் மழையால் மாஹே பகுதி மேலும் பாதிக்கப்படும் என்பதால் புதுச்சேரி அரசு தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகிறது.

The post கனமழை எதிரொலி: புதுச்சேரிக்குட்பட்ட மாஹே பகுதியில் தொடர் கனமழையால் வீடுகளை சூழ்ந்த வெள்ளம்..!! appeared first on Dinakaran.

Tags : Mahe ,Puducherry Puducherry ,Kerala ,Kannur ,Kozhukode ,Puducherry ,Dinakaran ,
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...