×

வடசென்னை அனல்மின் நிலைய விரிவாக்கத்தின் 3-ம் நிலைய கட்டுமான பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் ஆய்வு..!!

திருவள்ளூர்: வடசென்னை அனல்மின் நிலைய விரிவாக்கத்தின் 3-ம் நிலைய கட்டுமான பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் ஆய்வு செய்தார். திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல்மின் நிலையத்தில் 2 நிலைகளில் உள்ள 5 அலகுகளில் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. வடசென்னை அனல்மின் நிலைய விரிவாக்கத்தின் 3-வது நிலை எண் கட்டுமான பணிகள் ரூ.8,327 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகளை மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து அனல்மின் நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து அதிகாரிகள் அமைச்சரிடம் பவர் பாயிண்ட் மூலம் எடுத்துரைத்தனர். அனல்மின் நிலைய விரிவாக்க பணிகள் 90% முடிந்துள்ளதாகவும், அடுத்த சில மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த அளவிலான நிலக்கரியை கொண்டு அதிகபட்சமாக மின் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தில் இந்த அனல்மின் நிலையம் நிறுவப்பட்டு வருகிறது.

The post வடசென்னை அனல்மின் நிலைய விரிவாக்கத்தின் 3-ம் நிலைய கட்டுமான பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் ஆய்வு..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Thangam Tennarasu ,3rd station ,North Chennai Power Station ,Tiruvallur ,Thangam Thannarasu ,North Chennai ,Thermal Power Station ,Thermal ,Power ,Station ,
× RELATED தென்மேற்கு பருவமழையினை எதிர்கொள்ள...