×

முத்திரைத்தாள் அச்சகத்தில் 65 டெக்னீசியன்கள்.. ஐடிஐ படித்திருந்தால் போதும்

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள முத்திரைத்தாள் அச்சகத்தில் 65 டெக்னீசியன் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1. Junior Technician (Fitter): 24 இடங்கள் (எஸ்சி-5, ஒபிசி-6, பொருளாதார பிற்பட்டோர்-2, பொது-11).
2. Junior Technician (Turner): 4 இடங்கள் (எஸ்டி-1, பொது-3)
3. Junior Technician (Attendant Operator-Chemical Plant): 11 இடங்கள் (எஸ்சி-1, ஒபிசி-2, பொருளாதார பிற்பட்டோர்-1, பொது-7)
4. Junior Technician (Moulder): 3 இடங்கள் (பொது)
5. Junior Technician (Heat Treatment): 2 இடங்கள் (பொது)
6. Junior Technician (Foundrymam/Furnaceman): 10 இடங்கள் (எஸ்சி-1, எஸ்டி-1, ஒபிசி-2, பொருளாதார பிற்பட்டோர்-1, பொது-5)
7. Junior Technician (Blacksmith): 1 இடம் (பொது)
8. Junior Technician (Welder): 1 இடம் (பொது)
9. Junior Technician (Carpenter): 1 இடம் (பொது)
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான வயது : 15.07.23 தேதியின்படி 25க்குள் இருக்க வேண்டும்.சம்பளம்: ரூ.18,780- 67,390.
தகுதி: காலியிடங்கள் ஏற்பட்டுள்ள டிரேடில் ஐடிஐ தேர்ச்சியுடன் என்சிவிடி/எஸ்சிவிடியில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
10. Junior Office Assistant: 6 இடங்கள் (எஸ்சி-1, எஸ்டி-1, ஒபிசி-2, பொது-2).
11. Junior Bullion Assistant: 2 இடங்கள் (எஸ்சி-1, எஸ்டி-1)
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான வயது: 28க்குள்.
சம்பளம்: ரூ.21,540-77,160
தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சியும், கணினி அறிவும், நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 40 வார்த்தைகள் அல்லது இந்தியில் 30 வார்த்தைகள் டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்களும், ஒபிசியினருக்கு 3 வருடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
பணி எண் 10 மற்றும் 11க்கு ஆன்லைன் தேர்வு மூலமும், இதர பணிகளுக்கு திறன் தேர்வு (ஸ்கில் டெஸ்ட்) தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

கட்டணம்: பொது/ஒபிசி/ பொருளாதார பிற்பட்டோருக்கு ₹600/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு ₹200/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

www.igmmumbai.spmcil.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.07.2023.

The post முத்திரைத்தாள் அச்சகத்தில் 65 டெக்னீசியன்கள்.. ஐடிஐ படித்திருந்தால் போதும் appeared first on Dinakaran.

Tags : Mumbai, Maharashtra State ,IDI ,
× RELATED தேனியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி