×

செங்கோட்டை அருகே அடவிநயினார் அணைக்கு செல்லும் சாலை மூழ்கியது: தொடர்மழையால் குளத்தில் மேலும் உடைப்பு ஏற்பட வாய்ப்பு

 

தென்காசி: தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே குளத்தின் கரை உடைந்து வயலுக்குள் வெள்ளம் புகுந்தது. தென்காசி மாவட்டத்தில் கடந்த இரண்டு,மூன்று நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் வெளருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் மழையால் மேக்கரை என்ற இடத்தில் தென்காசி மாவட்டத்தின் மிக பெரிய அணையான அடவிநயினார் அணை உள்ளது.

அந்த அணையை ஒட்டியுள்ள ரெட்டைகுளம் என்ற குளத்தில் நேற்று மழைநீர் அதிகரித்ததால் குளம் பெருகி உடைப்பு ஏற்பட்டது. அந்த உடைப்பின் காரணமாக வயல் வெளிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. தற்சமயம் பாசன பணிகள் ஏதும் நடக்காத போதிலும் குளத்தில் நீர் பாய்ந்ததால் வயல்வெளிகள் அனைத்தும் நீரில் மூழ்கின. இது குறித்து பொது பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததும் அவர்கள் உடைப்பை சரிசெய்யவில்லை என்று அப்பகுதியில் இருந்த விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

The post செங்கோட்டை அருகே அடவிநயினார் அணைக்கு செல்லும் சாலை மூழ்கியது: தொடர்மழையால் குளத்தில் மேலும் உடைப்பு ஏற்பட வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Adavinayanar Dam ,Senkotta ,Tenkasi ,Red Fort ,Tenkasi district ,Dinakaran ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...