×

அதிக வட்டி தருவதாக கூறி ரூ.6,000 கோடி மோசடி!: வேலூரில் ஐஎஃப்எஸ் நிதி நிறுவன இயக்குனர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை..!!

வேலூர்: வேலூரில் ஐ.எஃப்.எஸ். நிதி நிறுவனம் தொடர்புடைய 3 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. ஐ.எஃப்.எஸ். நிதி நிறுவன இயக்குநர்களின் உறவினர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது. பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி ஐ.எஃப்.எஸ். நிதி நிறுவனம் சுமார் ரூ.6,000 கோடி மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. ஐ.எஃப்.எஸ். நிதி நிறுவனம் மீது பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வேலூரில் ஐ.எஃப்.எஸ். நிதி நிறுவன இயக்குனர்கள் வீடுகளில் டெல்லி மற்றும் சென்னையை சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் மட்டும் 3 இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சத்துவாச்சாரி, காட்பாடி மற்றும் மேல்பாடி ஆகிய மூன்று இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வருகிறது. அரக்கோணம் அருகே ஐ.எஃப்.எஸ். நிதி நிறுவன முகவர் குமார் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

நிதி நிறுவன இயக்குனர்கள் ஜனார்த்தனன், லட்சுமி நாராயணன், வேத நாராயணன் மற்றும் மோகன் பாபு ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர். நிதி மோசடியில் ஈடுபட்ட ஐஎஃப்எஸ் நிறுவன இயக்குனர்களுக்கு ஏற்கனவே ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

The post அதிக வட்டி தருவதாக கூறி ரூ.6,000 கோடி மோசடி!: வேலூரில் ஐஎஃப்எஸ் நிதி நிறுவன இயக்குனர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை..!! appeared first on Dinakaran.

Tags : IFS Finance ,Vellore ,Check ,Vellore F.F. S.S. ,GI F.F. S.S. Financial Institutional ,IFS Financial Directors Houses ,Dinakaran ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...