×

லித்துவேனியாவில் தானியங்கி ரோபோ வாகனங்கள் அறிமுகம்: டிரைவர் இல்லா டெலிவரி வாகனங்களுக்கு மக்கள் வரவேற்பு

லித்துவேனியா: லித்துவேனியாவில் தானியங்கி ரோபோ வாகனங்கள் பில்லியன்ஸ் நகரம் முழுவதும் ஷாப்பிங் டெலிவரிகளை செய்து வருகின்றன. ஓட்டுநர் இல்லாத இந்த வாகனங்கள் சிறிய மற்றும் பெரிய ஆன்லைன் மளிகை ஆர்டர்களுக்கு ஏற்றவாறு பூட்டக்கூடிய பெட்டிகளை கொண்டிருக்கின்றன. லித்துவேனியாவில் டெலிவரி ஸ்டார்ட் அப் நிறுவனமான லாஸ்ட் மைல் இந்த சேவையை முதல் கட்டமாக பில்லியன்ஸ் நகரில் மட்டும் தொடங்கி இருக்கிறது.

இந்த தானியங்கி வாகனங்கள் அதிகபட்சமாக மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று மளிகை பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்து வருகின்றன. ஜிபிஎஸ் நுட்பத்தில் இந்த வாகனங்கள் ஓட்டுநர் இன்றி இயங்கும் என்றாலும் முன்னெச்சரிக்கையாக அதில் பல்வேறு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பைலட் திட்டம் மூலம் தானியங்கி வாகனங்கள் வெற்றி கரமாக டெலிவரி செய்வது நிரூபிக்கப்பட்டிருக்கும் நிலையில் விரைவில் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க லாஸ்ட் மைல் திட்டமிட்டுள்ளது.

The post லித்துவேனியாவில் தானியங்கி ரோபோ வாகனங்கள் அறிமுகம்: டிரைவர் இல்லா டெலிவரி வாகனங்களுக்கு மக்கள் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Lithuania ,Billions ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...