×

பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து 2,598 கன அடியில் இருந்து 6,659 கன அடியாக அதிகரிப்பு

ஈரோடு: ஈரோடு பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து 2,598 கன அடியில் இருந்து 6,659 கன அடியாக அதிகரித்துள்ளது. 105 அடி கொள்ளளவு கண்ட அணையின் நீர்மட்டம் 77.34 அடியாகவும், நீர்வரத்து 6,659 கன அடியாகவும் உள்ளது. அணையிலிருந்து 1,205 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் நீர் இருப்பு 14.31 டிஎம்சியாக உள்ளது. சேலம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 188 கனஅடியில் இருந்து 142 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 85.97 அடியிலிருந்து 85.16அடியாக குறைவு: நீர் இருப்பு 47.29 டிஎம்சியாக உள்ளது.

The post பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து 2,598 கன அடியில் இருந்து 6,659 கன அடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Bhavanisagar dam ,Erode ,Dinakaran ,
× RELATED பவானிசாகர் அணையின் நீர்வரத்து குறைந்தது