×

கொட்டித் தீர்க்கும் கனமழை.. கேரளாவில் 11 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை.. நீலகிரி, வால்பாறை,மாஹேவிலும் லீவ் விட்டாச்சு!!

சென்னை :தென் மேற்கு பருவமழை கேரளா மற்றும் கேரளாவை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளிலும் கொட்டி தீர்த்து வருகிறது. இந்த நிலையில், கனமழை காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஜூலை 06) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நேற்று உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 தாலுக்காக்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை மாவட்டம் முழுவதுமுள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.அதேபோல் கோவை மாவட்டம் வால்பாறை வட்டத்திலுள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக புதுச்சேரி பிராந்தியமான மாஹேவில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கனமழை காரணமாக 11 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழா, பத்தனம்திட்டா, கொல்லம் மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மழையோடு சூறாவளி வீசியதால் திருச்சூர் , மலப்புரம் மாவட்டங்களில் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. ரதிருச்சூர், மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் சூறாவளி காற்றால் மின்கம்பங்கள், வீடுகள் சேதம் அடைந்ததில் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே இன்றும் கனமழை தொடரும் என 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

The post கொட்டித் தீர்க்கும் கனமழை.. கேரளாவில் 11 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை.. நீலகிரி, வால்பாறை,மாஹேவிலும் லீவ் விட்டாச்சு!! appeared first on Dinakaran.

Tags : Heavy ,Kerala ,Chennai ,South West ,Tamil Nadu ,Nilgiris ,Valpara ,Mahe ,
× RELATED தமிழக – கேரள எல்லையில் முகாமிட்ட யானை உயிரிழப்பு