×

நாட்டுத்துப்பாக்கியை வீசி விட்டு தப்பிய 2 பேர் கைது

சேலம்: சேலம் இரும்பாலை குற்றப்பிரிவு போலீசார், நாயக்கன்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை கண்டதும் நாட்டு துப்பாக்கியை தூக்கி வீசி விட்டு, 5 பேர் தப்பி ஓடி விட்டனர். துப்பாக்கியை மீட்ட போலீசார், தப்பி ஓடியவர்களை தேடி வந்தனர். இது தொடர்பாக வேடுகத்தாம்பட்டியை சேர்ந்த சரவணன்(28), திருமலைகிரியை சேர்ந்த 18 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

The post நாட்டுத்துப்பாக்கியை வீசி விட்டு தப்பிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem Railway Crime Branch ,Nayakkanpatti ,Dinakaran ,
× RELATED விளைநிலங்கள் வழியாக குழாய் அமைக்க எதிர்ப்பு