×

மணிப்பூரில் அமைதி வேண்டி காணிமடத்தில் சிறப்பு யாகம்

அஞ்சுகிராமம், ஜூலை 6: மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற கலவரத்தினால் பொதுமக்கள் பல்வேறு பாதிப்புகள் அடைந்துள்ளனர். இதனால் அங்கு அமைதி நிலவ வேண்டியும், பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டியும் காணிமடம் மந்திராலயத்தில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு லோக ஷேம யாகத்தை பொன்காமராஜ் சுவாமிகள் நடத்தினார். பவுர்ணமியை முன்னிட்டு அதிகாலை ஹோமம், யோகி ராம்சுரத்குமார் விக்ரகத்திற்கு பால், பழம், பன்னீர், இளநீர், தேன், உள்ளிட்ட பதினாறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி விக்ரகத்திற்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும், பகல் ஒரு மணிக்கு அன்னதானமும் நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற இலவச மருத்துவ முகாமை பொன்காமராஜ் சுவாமிகள் தொடங்கி வைத்தார். மாலையில் நர்த்தன பஜனையும், பொதுமக்கள் நோய் நொடியின்றி சுபிட்சமாக வாழ வேண்டி குரு பூர்ணிமா பூஜை, மாயம்மா ஹோமம், நிலா முற்ற பூஜை ஆகியவை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் குடும்பத்தினருடன் வந்து வழிபாடு செய்தனர்.

The post மணிப்பூரில் அமைதி வேண்டி காணிமடத்தில் சிறப்பு யாகம் appeared first on Dinakaran.

Tags : Special Yagya ,Ganimad ,Manipur ,Anjugram ,
× RELATED மணிப்பூரில் நிலநடுக்கம்