×

இயற்கை விவசாயத்திற்கு மாறும் விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர் கலசபாக்கத்தில் மரபு விதை திருவிழா

கலசபாக்கம், ஜூலை 6: கலசபாக்கத்தில் நேற்று நடந்த மரபு விதை திருவிழாவில் இயற்கை முறையில் சாகுபடி செய்ய மரபு விதைகளை விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். கலசபாக்கம் பகுதி மக்களின் பிரதான தொழில் விவசாயம். நெல், கரும்பு, மணிலா உள்ளிட்ட பயிர் வகைகளை இப்பகுதி விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது நெல், மணிலா மற்றும் தோட்டப்பயிர்கள் சாகுபடி செய்யும் போது நோய் தாக்குதல்கள் அதிகமாக உள்ளது. அதேபோல் அடிக்கடி உரத்தட்டுப்பாடு ஏற்படுவதால் இயற்கை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கலசபாக்கத்தில் வாரச்சந்தையில் வெள்ளிக்கிழமை தோறும் இயற்கை முறையில் சாகுபடி செய்த காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் மரபு விதைகளும் இங்கு விற்பனை செய்வதால் நாளுக்கு நாள் இயற்கை விவசாயத்தில் விவசாயிகளின் ஈடுபாடு அதிகரித்துள்ளது.

நேற்று கலசபாக்கத்தில் மரபு விதை திருவிழா நடைபெற்றது. இதில் கலசபாக்கம், போளூர், திருவண்ணாமலை, களம்பூர், புதுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் தாங்கள் இயற்கை முறையில் சாகுபடி செய்த பாசுமதி, ஆற்காடு கிச்சடி சம்பா, சீரக சம்பா உள்ளிட்ட பாரம்பரிய மரபு விதைகளையும் தோட்டப்பயிர்களான முள்ளங்கி, மூக்குத்தி, அவரை, பப்பாளி, பூசணி, குண்டு மிளகாய் உள்ளிட்ட விதைகளையும் விற்பனை செய்தனர். அதேபோல் மாதுளை, சிவப்பு அவரை, கொத்தவரை, பீர்க்கன் இயற்கை முறையில் சாகுபடி செய்த பொருட்களை மரபு விதை திருவிழாவில் விற்பனை செய்தனர். இதனை பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த விவசாயிகள், பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

The post இயற்கை விவசாயத்திற்கு மாறும் விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர் கலசபாக்கத்தில் மரபு விதை திருவிழா appeared first on Dinakaran.

Tags : Kalasappakkam ,Kalasapakkam ,
× RELATED கோடை மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி...