×

ரேஷன் அரிசி கடத்தியவருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை: உத்தமபாளையம் கோர்ட் தீர்ப்பு

 

கம்பம், ஜூலை 6: உத்தமபாளையம் அம்மாபட்டியை சேர்ந்தவர் சுபாஷ் (42). இவர் கடந்த 2022ம் ஆண்டு அக்.13ம் தேதி 1,200 கிலோ தமிழக ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயற்சித்துள்ளார். அப்போது உத்தமபாளையம் குடிமைபொருள் பதுக்கல் தடுப்பு பிரிவு புலனாய்வு இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையிலான போலீசார் அவரை மடக்கி பிடித்தனர்.

இது சம்பந்தமாக உத்தமபாளையம் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. வழக்கை விசாரித்த உத்தமபாளையம் நீதிமன்ற நடுவர் ராமநாதன் நேற்று, ரேஷன் அரிசியை கடத்திய குற்றத்திற்காக சுபாஷ்க்கு 30 நாள் சிறை தண்டனை மற்றும் ரூ.5000 அபராதமும், அதை கட்ட தவறினால் மேலும் ஒரு வாரம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். தீர்ப்பையடுத்து சுபாஷ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

 

The post ரேஷன் அரிசி கடத்தியவருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை: உத்தமபாளையம் கோர்ட் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Utthampalayam Court ,Kambam ,Subhash ,Ammapatti ,Uttamapalayam ,
× RELATED நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை;...