×

வேங்கைவயல் விவகாரம் டிஎன்ஏ பரிசோதனைக்காக 8 பேரிடம் ரத்த மாதிரி சேகரிப்பு

புதுக்கோட்டை: வேங்கை வயல் விவகாரத்தில் டிஎன்ஏ பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்த 8 பேர் கோர்ட் உத்தரவின்படி அரசு மருத்துவமனைக்கு வந்து ரத்தமாதிரி அளித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராம ஆதிதிராவிடர் குடியிருப்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் டிஎன்ஏ பரிசோதனைக்கு மறுத்த 8 பேரும் கண்டிப்பாக டிஎன்ஏ பரிசோதனைக்கு ரத்த மாதிரி வழங்க வேண்டும் என்று புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து நேற்று 8 பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து ரத்த மாதிரிகளை கொடுத்தனர். அப்போது ரத்த மாதிரி கொடுத்த பிறகு பிரச்னை ஏதும் வந்தால் மருத்துவ நிர்வாகம் பொறுப்பேற்காது என்று தனித்தனியாக எழுதி கையொப்பம் கேட்டனர். இதனால் அந்த 8 பேருக்கும் டாக்டர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த சிபிசிஐடி போலீசார் அவர்களை சமாதானம் செய்து ரத்த மாதிரி எடுக்க வைத்தனர். இதையடுத்து அவை சென்னைக்கு அனுப்பப்படவுள்ளது. வேங்கை வயல் அருகே இறையூரை சேர்ந்த மேலும் 4 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை செய்ய அனுமதி கேட்டு சிபிசிஐடி போலீசார் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர்.

The post வேங்கைவயல் விவகாரம் டிஎன்ஏ பரிசோதனைக்காக 8 பேரிடம் ரத்த மாதிரி சேகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Vengaiyal ,Pudukottai ,Vengai ,Dinakaran ,
× RELATED வேங்கைவயல் விவகாரம்: தேர்தல்...