×

கல்குவாரிக்கு அனுமதி எதிர்த்து கிராம மக்கள் போராட்டம்

 

திருத்தணி: திருத்தணி ஒன்றியம் டி.சி.கண்டிகை கிராமம் அருகே உள்ள மலைப்பகுதியில் கற்கள் வெட்டி எடுக்க மாவட்ட கனிம வளத்துறையினர் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு அனுமதியளித்துள்ளது. இந்நிலையில், கடந்த பத்து நாட்களுக்கு முன் வருவாய் துறையினர் கல்குவாரி நடத்துவதற்கு அனுமதி வழங்கிய இடத்தில், நில அளவீடு செய்ய சென்றபோது, கிராம பொதுமக்கள் தேசிய கொடியுடன் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து, கல்குவாரி துவங்குவதற்கு டெண்டர் எடுத்த தனியார் நபர்கள் இடத்தை பார்வையிட நேற்று வந்தனர். தகவல் அறிந்ததும் கிராம பொதுமக்கள் கல்குவாரி துவங்கவுள்ள இடத்திற்கு நேரில் சென்று அங்கு அமர்ந்து கல்குவாரிக்கு அனுமதிக்க மாட்டோம் என, 70க்கும் மேற்பட்டடோர் போராட்டம் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் திருத்தணி தாசில்தார் மதன், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.

The post கல்குவாரிக்கு அனுமதி எதிர்த்து கிராம மக்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Calquary ,Tiruthani ,resources ,Tiruthani Union DC Kandigai ,
× RELATED திருத்தணியில் சாலை விரிவாக்கப்பணிகள்...