×

மாவட்ட தலைநகரங்களில் வரும் 24ம் தேதி பேரணி: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தீர்மானம்

செங்கல்பட்டு: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் எழுச்சி நாள் கூட்டம் மற்றும் ஆண்டு கொடியேற்று விழா மாநில தலைவர் அன்பரசு தலைமையில் செங்கல்பட்டில் நடைபெற்றது. மாநில துணைப் பொதுச் செயலாளர் வாசுகி வரவேற்றார். பின்னர், தமிழக அரசு தேர்தல் கால வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், நிலுவையில் உள்ள கோரிக்கைகளை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்த்தும் வருகிற ஜூலை மாதம் 11ம் தேதியன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது.

அதே கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 24ம் தேதியன்று மாவட்ட தலைநகரங்களில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பேரணி நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தை நிறைவு செய்தும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் கொள்கைகளும், உழைக்கும் வர்க்கம் சந்திக்கும் சவால்களும் என்ற தலைப்பில் சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராசன் கருத்துரை வழங்கினார். மாநில பொருளாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.

The post மாவட்ட தலைநகரங்களில் வரும் 24ம் தேதி பேரணி: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Rally on 24th ,Tamil Nadu Government ,Union ,Chengalpattu ,Day ,Annual Flag Hoisting ,State ,President ,Anbarasu ,24th Rally ,Dinakaran ,
× RELATED பதிவு பெறாமல் வெளிநாட்டு வேலைக்கு...