×

நடிகை ஜாக்குலின் நீதிமன்றத்தில் ஆஜர்

புதுடெல்லி: மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் நேற்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். ரூ.200 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் டெல்லி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவருடன் தொடர்புடைய நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் கடந்த ஆண்டு நவம்பர் 15ம் தேதி முதல் ஜாமீன் பெற்று வெளியே உள்ளார். நேற்று இந்த வழக்கு டெல்லி சிறப்பு நீதிபதி சைலேந்திர மாலிக் முன்பு விசாரணைக்கு வந்த போது நடிகை ஜாக்குலின் நேரில் ஆஜரானார்.

The post நடிகை ஜாக்குலின் நீதிமன்றத்தில் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Jacqueline ,New Delhi ,Jacqueline Fernandez ,Delhi ,Sukesh Chandrasekhar ,Dinakaran ,
× RELATED சம்பாதிக்க கல்வி தகுதி கொண்ட பெண்,...