×

5000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் மின்கட்டணம், கழிவுப் பஞ்சு விலையை குறைக்க வேண்டும் : வைகோ வலியுறுத்தல்

சென்னை: 5000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், மறுசுழற்சி ஜவுளி நிறுவனங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மின் கட்டணம் மற்றும் கழிவுப்பஞ்சு விலை உயர்வால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல், 300 ஓஇ நூற்பாலைகள் இன்று முதல் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கி உள்ளன. இன்றைய சூழலில் ஒரு கிலோ நூல் உற்பத்திக்கு ரூ.20 நஷ்டத்தை ஓஇ நூற்பாலை தொழில்துறையினர் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, மின்கட்டணத்தை தமிழ்நாடு அரசும், கழிவுப் பஞ்சு விலையை நூற்பாலை நிர்வாகத்தினரும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே பிரச்னைக்கு தீர்வாகும். திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், மங்கலம், காரணம்பேட்டை, உடுமலை ,வெள்ளக்கோவில் உள்ளிட்டப் பகுதிகளில் மறு சுழற்சி நூற்பு ஆலைகள் மூடப்பட்டு இருப்பதால் 1500 டன் நூல் உற்பத்தி பாதிப்பதுடன், 5000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலையும் உருவாகி உள்ளது. எனவே தமிழ்நாடு அரசு உடனடியாக மறுசுழற்சி ஜவுளி நிறுவனங்களின் கோரிக்கையை நிறைவேற்ற கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post 5000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் மின்கட்டணம், கழிவுப் பஞ்சு விலையை குறைக்க வேண்டும் : வைகோ வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Vico ,Chennai ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...