×

பெட்ரோல் ஒரு லிட்டர் 15 ரூபாய்க்கு வேண்டுமா?: அமைச்சர் நிதின் கட்கரி புது யோசனை

பிரதாப்கார்: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.15க்கு விற்பனை செய்யப்பட வேண்டும் என்றால் 60 சதவீத எத்தனால், 40 சதவீத மின்சாரத்தை பயன்படுத்த வேண்டும் என்று அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்தார்.
ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்கரில் நடந்த பா.ஜ பொதுக்கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டு பேசும் போது பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 15 ஆக குறைக்க புதுமையான திட்டத்தை முன்வைத்தார். அவர் பேசும் போது,’ நாடு முழுவதும் உள்ள விவசாயிகளை ஆற்றல் வழங்கும் நபர்களாக மாற்ற வேண்டும். அதை பின்பற்ற 60 சதவீதம் எத்தனால் மற்றும் 40 சதவீதம் மின்சாரத்தை பயன்படுத்த வேண்டும். அப்படி செய்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.15க்கு குறையும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் எத்தனாலில்தான் இனி எல்லா வாகனங்களும் ஓடும். அதற்கு சராசரியாக 60% எத்தனால், 40% மின்சாரம் பயன்படுத்த வேண்டும். அப்படி செய்தால் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 15 என்ற விகிதத்தில் கிடைக்கும். இதனால் மக்கள் பயனடைவார்கள்’ என்று தெரிவித்தார்.

The post பெட்ரோல் ஒரு லிட்டர் 15 ரூபாய்க்கு வேண்டுமா?: அமைச்சர் நிதின் கட்கரி புது யோசனை appeared first on Dinakaran.

Tags : Minister ,Nitin Gadkari ,Pratapkar ,
× RELATED நாக்பூர் தொகுதியில் போட்டியிடும்...