×

லக்கிம்பூர் வழக்கில் சிறையில் உள்ள ஒன்றிய அமைச்சர் மகனுக்கு டெங்கு

லக்கிம்பூர்: உத்தர பிரதேச மாநிலம், லக்கிம்பூர் கேரியில் கடந்த 3ம் தேதி விவசாயிகள் மீது காரை ஏற்றி 4 பேர் கொல்லப்பட்டனர். அப்போது விவசாயிகள் நடத்திய தாக்குதலில் 4 பாஜ.வினர் உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர். விவசாயிகள் கொல்லப்பட்ட  வழக்கில், ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை 2 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றம் அனுமதி அளித்தது.இந்நிலையில், ஆசிஸ் மிஸ்ராவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால், நேற்று முன்தினம் அவரை மாவட்ட சிறைக்கு போலீசார்  அனுப்பி வைத்தனர். அங்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது….

The post லக்கிம்பூர் வழக்கில் சிறையில் உள்ள ஒன்றிய அமைச்சர் மகனுக்கு டெங்கு appeared first on Dinakaran.

Tags : Dengue ,union minister ,Lakimpur ,Lakhimpur, Uttar Pradesh ,
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...