×

தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கல்வி கட்டணம் உயர்வு

சென்னை: தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கல்வி கட்டணம் உயர்த்தபட்டுள்ளது. எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு முன்னதாக ரூ.13,000-ஆக இருந்த வருடாந்திர கட்டணம் ரூ.18,000-ஆக உயர்த்தபட்டுள்ளது. பிடிஎஸ் படிப்பிற்கான கட்டணம் ரூ.11,000-இல் இருந்து ரூ.16,000-ஆக அதிகரிக்கபட்டுள்ளது. 2016-17ஆம் கல்வியாண்டுக்குப் பின் கட்டணம் எதுவும் உயர்த்தப்படாத நிலையில் 7 ஆண்டுகளுக்குப் பின் உயர்த்தி தமிழக மருத்துவ கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

The post தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கல்வி கட்டணம் உயர்வு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government Medical Colleges ,Chennai ,Tamil Nadu Government ,MPPS ,
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்