×

மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவரை கொலை செய்த வழக்கில் 2 பேர் மீது போடப்பட்ட குண்டாஸ் ரத்து..!!

சேலம்: மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவரை கொலை செய்த வழக்கில் 2 பேர் மீது போடப்பட்ட குண்டாஸ் ரத்து செய்யப்பட்டது. சேலம் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2022-ல் மேட்டூர் அரசு மருத்துவமனையில் புகுந்து ரகுநாதன் என்பவரை கொன்ற வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 3 பேரில் வெள்ளையன், மூர்த்தி ஆகிய 2 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

The post மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவரை கொலை செய்த வழக்கில் 2 பேர் மீது போடப்பட்ட குண்டாஸ் ரத்து..!! appeared first on Dinakaran.

Tags : Kundas ,Government Hospital of Mattur ,Salem ,Mathur Government ,Hospital ,Dinakaran ,
× RELATED பாலியல் தொழிலுக்கு சிறுமியை கட்டாயப்படுத்திய பெண் மீது குண்டாஸ்