×

தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் திருத்தச் சட்டம் அரசிதழில் வெளியீடு..!!

சென்னை: தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் திருத்தச் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. பணிபுரியும் இடத்தில் குடிநீர், கழிவறை, முதலுதவி வசதிகள் செய்து தர திருத்தச் சட்டம் வழிவகுக்கும். ஆளுநரின் ஒப்புதலை பெற்றதை அடுத்து சட்டத்திருத்தம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. கடைகள், நிறுவனங்கள் திருத்தச் சட்டத்தின்படி பணிபுரியும் இடத்தில் குடிநீர், கழிவறை வசதிகள் அவசியம். போதிய காற்றோட்டத்துடன் கூடிய ஓய்வறை, சாய்வு நாற்காலிகள், முதலுதவி பெட்டிகள் இடம் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் திருத்தச் சட்டம் அரசிதழில் வெளியீடு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,of Tamil Nadu ,Dinakaran ,
× RELATED அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற...