×

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறினார் கேன் வில்லியம்சன்!

துபாய்: ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரில் லார்ட்ஸில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தனது 32வது சதத்தை பதிவு செய்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் அடைந்தார். ஸ்டீவ் ஸ்மித் தற்போது 882 புள்ளிகளுடன் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார்.

இங்கிலாந்து அணியின் வீரரான ஜோ ரூட் ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெரிதாக சோபிக்காததால் 4 புள்ளிகளை இழந்து பட்டியலில் 5வது இடத்திற்கு தள்ளப்பட்டார். நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் 1 புள்ளியை பெற்று பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். 2021ம் ஆண்டிற்கு பிறகு கேன் வில்லியம்சன் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் 7 இடங்களில் 4 ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் இடம்பெற்று ஆதிக்கம் செலுத்துகின்றனர். மார்னஸ் லாபுசாக்னே மூன்றாவது இடத்திலும், டிராவிஸ் ஹெட் நான்காவது இடத்திலும், உஸ்மான் கவாஜா ஏழாவது இடத்திலும் உள்ளனர்.

The post ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறினார் கேன் வில்லியம்சன்! appeared first on Dinakaran.

Tags : Kane Williamson ,ICC ,Dubai ,New Zealand ,England ,Dinakaran ,
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...