×

டெல்லியில் தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு: பார் கவுன்சில் தலைவர் கண்டனம்

டெல்லி: டெல்லியில் உள்ள தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. வழக்கு விசாரணையின் போது நடைபெற்ற இந்த துப்பாக்கி சூட்டில் யாரும் காயம் அடையவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. வழக்கறிஞர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளதாக போலிசார் கூறியுள்ளனர்.

திஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு டெல்லி பார் கவுன்சில் தலைவர் கே.கே.மனன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த துப்பக்கிசூடு குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் ஆயுதங்களுக்கு உரிமம் உள்ளதா இல்லையா என்பது குறித்து விசாரிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். ஆயுதங்கள் உரிமம் பெற்றிருந்தாலும், வழக்கறிஞரோ அல்லது வேறு யாரும் நீதிமன்ற வளாகத்திலோ அல்லது அதைச் சுற்றியோ அதனை பயன்படுத்த முடியாது என கே.கே.மனன் கூறியுள்ளார்.

The post டெல்லியில் தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு: பார் கவுன்சில் தலைவர் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Dees Hasari ,Delhi ,Bar council ,Dees ,Hazari ,Dees Hazari Court ,Dinakaran ,
× RELATED நீதித்துறை விடுமுறைகள் குறித்து...