×

ஆக்கிரமிப்புகளை அகற்றி ஊராட்சிக்கு சொந்தமான 25 ஏக்கர் நிலத்தை மீட்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

கொள்ளிடம்: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சொந்தமான இடங்கள் கொள்ளிடம் அக்ரகாரம், கொள்ளிடம் அருகே தைக்கால் கிராமம், சையதுநகர், ஆயங்குடி பள்ளம், திருமயிலாடி, கொள்ளிடம் கடைத்தெருவைச் சேர்ந்த பகுதி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 250க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த நிலங்கள் கொள்ளிடம் அக்ரஹாரத் தெருவில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பாமா,ருக்மணி உடனாகிய வேணுகோபால்சாமி கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆகும். இந்த நிலங்கள் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றன. மேலே குறிப்பிட்ட அனைத்து நிலங்களும் ஆக்கிரமிப்பில் இருந்து வருகின்றன. ஆக்கிரமிப்பில் இருந்தும் அதனை அனுபவித்து வருபவர்கள் எந்த ஒரு வருவாயையும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு செலுத்தவில்லை.

இதனால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்கள் மூலம் வரவேண்டிய வருவாய் இனங்கள் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு கிடைக்கவில்லை. இதனால் ஊராட்சி ஒன்றியத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அனுமதி இன்றி நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து வருகின்றன.இந்த நிலங்களில் அனுமதி இல்லாமல் பல கட்டிடங்கள் கட்டப்படும் வருகின்றன. இதுகுறித்து ஆயங்குடி பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ரமேஷ் கூறுகையில், கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சொந்தமான 750 க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து வருகின்றன. இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்தார்.

The post ஆக்கிரமிப்புகளை அகற்றி ஊராட்சிக்கு சொந்தமான 25 ஏக்கர் நிலத்தை மீட்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Panchayat ,Kollidum ,Mayiladuthurai District ,Kollidum Panchayat Union ,Kollidam Agrakaram ,Thaikal ,Dinakaran ,
× RELATED ஒப்பந்ததாரரிடம் ₹15,000 லஞ்சம் ஊராட்சி மன்ற தலைவர் கைது: பாஜவை சேர்ந்தவர்