×

விம்பிள்டன் டென்னிஸ்: சபலென்கா, முர்ரே 2வது சுற்றுக்கு தகுதி

லண்டன்: கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் 2வது நாளான நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவில் 2ம் நிலை வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, 6-3,6-1 என்ற செட் கணக்கில், ஹங்கேரியின் பன்னா உட்வர்டிவை வீழ்த்தினார்.

துனிசியாவின் ஓன்ஸ் ஜபீர் 6-3,6-3 என்ற செட் கணக்கில், போலந்தின் மக்தலேனா ஃப்ரெச்சையும், 3ம் நிலை வீராங்கனையான கஜகஸ்தானின், எலெனா ரைபகினா, 4-6,6-1,6-2 என அமெரிக்காவின் ஷெல்பி ரோஜர்சையும் வீழ்த்தி 2வது சுற்றுக்குள் நுழைந்தனர்.

ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில், இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே 6-3,6-0,6-1 என சக நாட்டைச் சேர்ந்த ரியான் பெனிஸ்டனை வீழ்த்தினார். நம்பர் ஒன் வீரரான ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் இங்கிலாந்தின் கேமரூன் நோரி ஆகியோரும் முதல் சுற்றில் வென்று 2வது சுற்றுக்குள் நுழைந்தனர்.

The post விம்பிள்டன் டென்னிஸ்: சபலென்கா, முர்ரே 2வது சுற்றுக்கு தகுதி appeared first on Dinakaran.

Tags : Wimbledon Tennis ,Sabalenka ,Murray ,London ,Grand Slam ,Dinakaran ,
× RELATED சில்லி பாயின்ட்…