×

சென்னை அண்ணாசாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூ.485 கோடியில் உயர்மட்ட சாலை அமைக்க அரசாணை வெளியீடு

சென்னை: சென்னை அண்ணாசாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூ.621 கோடி மதிப்பில் உயர்மட்ட சாலை அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எல்டாம்ஸ் சாலை, எஸ்.ஐ.இ.டி. கல்லூரி சாலை, செனடாப் சந்திப்பு, நந்தனம் சந்திப்பு, சிஐடி சாலை சந்திப்புகளை கடந்து சாலை அமைய உள்ளது.

நாளுக்குநாள் சென்னை அண்ணாசாலையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். ஜெமினி மேம்பாலத்திற்கு அருகே உள்ள பாலத்தை கடந்த பின்னர் வாகன ஓட்டிகள் சாலை மார்க்கமாகவே செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.

வாகனத்தின் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக தொடர் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பலமணி நேரம் கழித்தே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பான்மையாக தாம்பரம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் இந்த சாலையின் வழியாக செல்லும்போது பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றன.

முக்கிய சாலையாக உள்ள அண்ணாசாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையில் ரூ.621 கோடி மதிப்பில் உயர்மட்ட சாலை அமைக்கப்படும் என கடந்த பட்ஜெட்டின்போது அப்போது நிதியமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் ல்டாம்ஸ் சாலை, எஸ்.ஐ.இ.டி. கல்லூரி சாலை, செனடாப் சந்திப்பு, நந்தனம் சந்திப்பு, சிஐடி சாலை சந்திப்புகளை கடந்து சாலை அமைய உள்ளது.

The post சென்னை அண்ணாசாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூ.485 கோடியில் உயர்மட்ட சாலை அமைக்க அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Tenampet ,Saithapet ,Chennai ,Annasalam ,Chennai Annasal ,Thenampet ,Dinakaran ,
× RELATED சென்னை மெட்ரோ பணி காரணமாக 2...