×

நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஈரோடு பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஈரோடு: நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஈரோடு பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையிலிருந்து 1,205 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் நீர் இருப்பு 14.06 டிஎம்சியாக உள்ளது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக இருப்பது பவானிசாகர் அணையாகும். இந்த அணையின் மூலம் கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டைஉள்ளிட்ட வாய்க்கால்கள் வழியாக ஏராளமான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

நீலகிரி மலைப்பகுதியே பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாகும். நீலகிரியில் மழை பெய்யும் பட்சத்தில் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பது வழக்கம். கடந்த சில மாதங்களாகவே அணைக்கு நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்ததால் நீர்மட்டம் குறைந்து வந்தது. இதேபோல் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வந்தது.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையிலிருந்து 1,205 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் நீர் இருப்பு 14.06 டிஎம்சியாக உள்ளது.

The post நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஈரோடு பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Erode Bavanisagar Dam ,Nilgiri district ,Erode ,Bhavanisagar Dam ,Erode Bhavanisagar Dam ,Dinakaran ,
× RELATED நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்கள் உதகை செல்ல இ-பாஸ் தேவையில்லை