×

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் 3வது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயனை நியமித்து தலைமை நீதிபதி உத்தரவு

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் 3வது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயனை நியமித்து தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அமலாக்கத்துறை, அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்ட விரோதம் என்று உத்தரவிடக்கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்ட விரோதம் என்று ஒரு நீதிபதியும், சட்ட விரோதம் இல்லை என்று மற்றொரு நீதிபதியும் தனித்தனியாக மாறுபட்ட தீர்ப்பு அளித்துள்ளனர். நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி மாறுபட்ட தீர்ப்பு தந்ததால் வழக்கு 3-வது நீதிபதிக்கு அனுப்பப்பட்டது.

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கை விசாரிக்கும் 3-வது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வழக்கை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரிப்பார் என ஐகோர்ட் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா அறிவித்துள்ளார். செந்நில் பாலாஜி சட்டப்படிதான் கைதா?, கைது செய்ய அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளதா? என 3-வது நீதிபதி விசாரிப்பார். ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு தருந்ததா என்பது பற்றியும் 3-வது நீதிபதி விசாரித்து தீர்ப்பு அளிப்பார்.

The post அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் 3வது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயனை நியமித்து தலைமை நீதிபதி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Minister ,Senthil Balaji ,Karthigayan ,Chennai ,Department of Enforcement ,Senthil ,Dinakaran ,
× RELATED பண மோசடி வழக்கில் ஜாமின் கோரிய...