×

5 பேர் மாற்றம், 7 பேருக்கு பதவி உயர்வு நெல்லைக்கு புதிய முதன்மைக் கல்வி அலுவலர்

நெல்லை, ஜூலை 5:பள்ளிக் கல்வித் துறையில் 7 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. நெல்லைக்கு புதிய முதன்மைக் கல்வி அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். இது தவிர 5 முதன்மைக் கல்வி அலுவலர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருப்பதி கடந்த ஜூன் 30ம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து பள்ளிக் கல்வித் துறையில் தொடக்கக் கல்வி மாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. பதவி உயர்வு பெற்றவர்கள் விவரம் வருமாறு: கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் சின்னராஜூ பதவி உயர்வு பெற்று நெல்லை முதன்மைக் கல்வி அலுவலராகவும், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கல்வி மாவட்ட அலுவலர் மணிமொழி பதவி உயர்வு பெற்று வேலூர் முதன்மைக் கல்வி அலுவலராகவும், விருதுநகர் மாவட்ட கல்வி அலுவலர் இந்திராணி பதவி உயர்வு பெற்று தேனி முதன்மைக் கல்வி அலுவலராகவும், அரியலூர் மாவட்ட கல்வி அலுவலர் அம்பிகாபதி பதவி உயர்வு பெற்று சிவகங்கை முதன்மைக் கல்வி அலுவலராகவும், காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அலுவலர் முனி சுப்புராயன் திருப்பத்தூர் முதன்மைக் கல்வி அலுவலராகவும், ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் கல்வி மாவட்ட அலுவலர் பழனி கடலூர் முதன்மைக் கல்வி அலுவலராகவும், நீலகிரி மாவட்ட கல்வி அலுவலர் கீதா பதவி உயர்வு பெற்று நீலகிரி முதன்மைக் கல்வி அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் அதற்கான அந்தஸ்தில் பணியாற்றி வரும் 5 ேபர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி வேலூர் முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி சென்னை ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குநராகவும், சிவகங்கை முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமிநாதன் சென்னை தொடக்கக் கல்வி இயக்கக துணை இயக்குநராகவும் (சட்டம்), கடலூர் முதன்மைக் கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் சென்னை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் துணை இயக்குநராகவும், திருப்பத்தூர் முதன்மைக் கல்வி அலுவலர் மதன்குமார் தஞ்சாவூர் முதன்மைக் கல்வி அலுவலராகவும், சென்னை ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குநர் ஆறுமுகம் செங்கல்பட்டு முதன்மைக் கல்வி அலுவலராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

The post 5 பேர் மாற்றம், 7 பேருக்கு பதவி உயர்வு நெல்லைக்கு புதிய முதன்மைக் கல்வி அலுவலர் appeared first on Dinakaran.

Tags : Gaddy ,Nellai ,
× RELATED நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில்...