×

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நாளை பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டி

நெல்லை, ஜூலை 5: தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பாளையங்கோட்டை கதீட்ரல் மேல்நிலைப்பள்ளியில் 11, 12ம் வகுப்பு பயிலும் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நாளை (6ம் ேததி) காலை 9.30 மணிக்கு நடக்கிறது. இதுகுறித்து நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் கூறியிருப்பதாவது: தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நெல்லை மாவட்டத்தில் 11. 12ம் வகுப்பு பயிலும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களிம் பேச்சாற்றாலையும், படைப்பாற்றாலையும் வளர்க்கும் நோக்கில் மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. நெல்லை மாவட்டத்தில் நாளை (6ம் தேதி) காலை 9.30 மணிக்கு பாளையங்கோட்டை கதீட்ரல் மேல்நிலைப்பள்ளியில் வைத்து 11, 12ம் வகுப்பு பயிலும் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்தப்போட்டிகளில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளும் கலந்து கொள்ளலாம். ஒரு பள்ளியிலிருந்து ஒரு போட்டிக்கு ஒரு மாணவர் வீதம் மூன்று போட்டிகளுக்கு 3 மாணவர்கள் கலந்து கொள்ளலாம். போட்டிகளுக்கான தலைப்புகள் போட்டிகள் தொடங்கும் முன்பு நடுவர்கள் முன்னிலையில் அறிவிக்கப்படும்.

போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தங்கள் பள்ளி தலைமையாசிரியரின் பரிந்துரையுடன் உரிய படிவத்தை நிறைவு செய்து போட்டி நடைபெறும் நாளில் அளிக்க வேண்டும். நெல்லை மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரமும், இரண்டாம் பரிசு ரூ.7 ஆயிரமும், மூன்றாம் பரிசு ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும். இந்தப் போட்டிகளில் முதல் பரிசு பெறும் மாணவ, மாணவிகள் மாநில அளவில் சென்னையில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொள்ளலாம். போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசு ரூ.15 ஆயிரமும், இரண்டாம் பரிசு ரூ.10 ஆயிரமும், மூன்றாம் பரிசு ரூ.7 ஆயிரமும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு நெல்லை கலெக்டர் அலுவலக வளாக இரண்டாம் தளத்தில் செயல்பட்டு வரும் மண்டலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ, தொலைபேசி வாயிலாகவோ (தொலைபேசி எண் 0462 – 2502521) தொடர்பு கொள்ளலாம். போட்டிகளில் நெல்லை மாவட்டத்தில் அனைத்து மேல்நிலைப்பள்ளிகளில் 11, 12ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நாளை பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Development Department ,Nellai ,Palayangottai Cathedral Secondary School ,
× RELATED சொந்த ஊரில் உடல் அடக்கம்; நெல்லை காங்....