×

அரசு மகளிர் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகளுக்கு அறிமுக வகுப்பு

 

திண்டுக்கல், ஜூலை 5: திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கல்லூரியில் முதலாண்டு மாணவிகளுக்கான அறிமுக வகுப்பு நேற்று நடைபெற்றது. திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிர் கல்லூரியில் 2023-24 கல்வி ஆண்டில் முதலாமாண்டில் சேர்ந்த மாணவிகளுக்கு 4 நாள்கள் சிறப்பு அறிமுக வகுப்பு நேற்று துவங்கியது. நிகழ்ச்சிக்கு, உதவி பேராசிரியர்கள் சுமதி, வளர்மதி முன்னிலை வகித்தனர். மருத்துவர் மகாலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி முதல்வர் லெட்சுமி தலைமை வகித்து பேசியதாவது, பள்ளிக் கூடமும், கல்லூரியும் இருவேறு உலகம் என்பதை மாணவிகள் புரிந்து கொள்ள வேண்டும். எந்த கல்லூரியாக இருந்தாலும், தேர்வு செய்த பாடத்தை ஆழ்ந்து படிப்பதற்கான ஆற்றலை மாணவிகள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பள்ளிக் காலங்களில் படிக்க வேண்டிய நிர்பந்தத்தை ஆசிரியர்கள் ஏற்படுத்துவார்கள். ஆனால், கல்லூரியில் அந்த பொறுப்பை மாணவிகளே ஏற்றுக் கொண்டாக வேண்டும். மாணவிகள் பலருக்கு உயர் கல்வி பயில்வதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அடுத்த நிலைக்கு மாணவிகள் முன்னேற வேண்டும். உடல் நலத்தோடு மன நலத்துக்கும் மாணவிகள் முக்கியத்துவம் அளித்தால் எளிதாக சாதிக்க முடியும். எல்லாவற்றுக்கும் மேலாக ஒழுக்கம் நிறைந்தவர்களாக வலம் வர வேண்டும் என்றார். இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ராமசாமி செய்திருந்தார்.

The post அரசு மகளிர் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகளுக்கு அறிமுக வகுப்பு appeared first on Dinakaran.

Tags : Government Women's College ,Dintukal ,Thindukal M. ,MM ,Dinakaran ,
× RELATED அரசு மகளிர் கலை கல்லூரியில் மாணவிகள் சேர்க்கை தொடங்கியது