×

கணவாய்ப்பட்டி ஊராட்சியில் மாவட்ட திட்ட இயக்குனர் ஆய்வு

 

கோபால்பட்டி, ஜூலை 5: சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியம்,கணவாய் பட்டி பகுதிகளில் ஒன்றிய அரசின் 15வது மாநில நிதி குழு திட்டத்தின் செயல்பாடுகளை மற்றும் கணவாய்ப்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி செயல்பாடுகள் மற்றும் புதிய கட்டிடப் பணிகளை மாவட்ட திட்ட இயக்குனர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வு பணியின் போது மாவட்ட திட்ட இயக்குனர் திலகவதி, சாணார்பட்டி வட்டார அலுவலர் அருள்களாவதி, சாணார்பட்டி ஒன்றிய உதவி பொறியாளர் ஜான் பிரிட்டோ, கணவாய்ப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் நிஷா ராமகிருஷ்ணன், கணவாய் பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நாச்சான், கணவாய்ப்பட்டி ஊராட்சி செயலாளர் வெற்றி வேந்தன் மற்றும் அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

The post கணவாய்ப்பட்டி ஊராட்சியில் மாவட்ட திட்ட இயக்குனர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Ganavaipatti Panchayat ,Gopalpatti ,15th State Finance Committee of the Union Government ,Chanarpatti Panchayat Union ,Ganavai Patti ,Dinakaran ,
× RELATED சாணார்பட்டி அருகே ஆலய திருவிழாவில்...