×

அரியப்பம்பாளையம் பேரூராட்சியில் ரூ.9 லட்சம் செலவில் பொதுக்கழிப்பிடம் கட்ட பூமி பூஜை

 

சத்தியமங்கலம், ஜூலை 5: அரியப்பம்பாளையம் பேரூராட்சி 12 வது வார்டு அம்பேத்கர் நகர் பகுதியில் 15 வது நிதி குழு மானியத்தில் ரூ.9 லட்சம் செலவில் பொதுக்கழிப்பிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. அரியப்பம்பாளையம் பேரூராட்சி தலைவர் மகேஸ்வரி செந்தில்நாதன் தலைமை தாங்கி பொது கழிப்பிடம் கட்டுவதற்கான பணியை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அரியப்பம்பாளையம் பேரூர் கழக செயலாளர் வக்கீல் செந்தில்நாதன், பொருளாளர் ரமேஷ், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் கந்தசாமி, பேரூர் விவசாய அணி அமைப்பாளர் முருகேசன், இளைஞரணி அமைப்பாளர் பிரசாந்த், அவை தலைவர் பழனிச்சாமி, சுரேந்தர், பேரூர் ஆதி திராவிடர் அணி அமைப்பாளர் அவிநாசி மற்றும் கட்சி நிர்வாகிகள், பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post அரியப்பம்பாளையம் பேரூராட்சியில் ரூ.9 லட்சம் செலவில் பொதுக்கழிப்பிடம் கட்ட பூமி பூஜை appeared first on Dinakaran.

Tags : Bhumi Pooja ,Ariyapambalayam ,Sathyamangalam ,Ariyapampalayam Municipality 12th Ward Ambedkar Nagar Area 15th Nidhi ,Bhoomi Pooja ,Ariyapampalayam Municipality ,Dinakaran ,
× RELATED சத்தியமங்கலம் பண்ணாரி அருகே கடும்...