×

கள் விற்றவர் கைது

 

ஈரோடு, ஜூலை 5: ஈரோடு மாவட்டம் பொலவக்காளிபாளையம் பகுதியில் கோபி மதுவிலக்கு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக இரண்டு சக்கர வாகனத்தில் வந்த நபரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அதில், அவர் பொலவக்காளிபாளையம் இந்திரா நகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் ஆண்டவன் (40) என்பதும், அவரது வாகனத்தை சோதனை செய்தபோது, தடை செய்யப்பட்ட கள் விற்பனைக்கு கொண்டு செல்வதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஆண்டவனை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 3 லிட்டர் கள்ளினை பறிமுதல் செய்தனர்.

The post கள் விற்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,Gobi Prohibition Police ,Polavakkalipalayam ,Erode district ,Dinakaran ,
× RELATED கலெக்டர் அலுவலகத்தில் சுகாதார செவிலியர்கள் பெருந்திரள் முறையீடு