×

மரம் விழுந்து மாணவி உள்பட 2 பேர் பலி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவனந்தபுரம்: கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. காசர்கோடு மாவட்டம் அங்கடிமுகர் என்ற இடத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நின்ற ஒரு மரம் வேரோடு சாய்ந்து மாணவர்கள் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த 6ம் வகுப்பு மாணவிகளான ஆயிஷத் மின்ஹா (11) மற்றும் ரிபானா ஆகிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஆயிஷத் மின்ஹா பரிதாபமாக உயிரிழந்தார். போல் பாலக்காடு அருகே வடக்கஞ்சேரியில் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தங்கமணி (55) என்ற பெண்ணின் மீது தென்னை மரம் விழுந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கோழிக்கோடு இருவஞ்சிப்புழா ஆற்றில் அப்பகுதியை சேர்ந்த உசேன் குட்டி என்பவர் அடித்துச் செல்லப்பட்டார். அவரைத் தேடும் பணி நடந்து வருகிறது.

The post மரம் விழுந்து மாணவி உள்பட 2 பேர் பலி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Kerala ,Kasargod district ,Angadimukhar ,
× RELATED கேரளம் ஆக மாறியது கேரளா