×

தர்ம முனீஸ்வரர் கோயிலில் வருடாபிஷேக விழா

 

இளையான்குடி, ஜூலை 5: இளையான்குடி அருகே வடக்கு சாலைக்கிராமத்தில் அமைந்துள்ள தர்ம முனீஸ்வரர் கோயிலில் கடந்த ஆண்டு இதே நாளில் மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. ஒரு ஆண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு நேற்று காலை சிறப்பு யாக பூஜை நடைபெற்று, 10 மணியளவில் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நிகழ்ச்சியுடன் வருடாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் வடக்கு சாலைக்கிராமம், குயவர்பாளையம், சாலைக்கிராமம், அய்யம்பட்டி ஆகிய கிராம மக்கள் கலந்து கொண்டு தர்ம முனீஸ்வரரை தரிசித்துச் சென்றனர். பின்னர் கிராமமக்கள் சார்பில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.

The post தர்ம முனீஸ்வரர் கோயிலில் வருடாபிஷேக விழா appeared first on Dinakaran.

Tags : Dharma Muneeswarar Temple ,Ilayayankudi ,Dharma ,Muneeswarar Temple ,North Road Village ,Dinakaran ,
× RELATED சாலைக் கிராமத்தில் ஆக்கிரமிப்புகள்...