×

எம்எல்ஏ செல்வராஜ் தாயார் முத்தம்மாளுக்கு 2ம் ஆண்டு நினைவு தினம்

 

திருப்பூர், ஜூலை 5: திமுக, எம்எல்ஏ செல்வராஜின் தாயார் முத்தம்மாள் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. திமுக திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான க.செல்வராஜின், தாயார் முத்தம்மாள் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம், எம்எல்ஏ செல்வராஜ் தலைமையில் கொங்கு மெயின் ரோட்டில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், திருப்பூர் திமுக தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி. மு.நாகராசன், வடக்கு மாநகர செயலாளர் மேயர் தினேஷ்குமார், பகுதி கழக செயலாளர்கள் கொ.ராமதாஸ், மேங்கோ பழனிசாமி, உசேன், பல்லடம் மேற்கு ஒன்றிய செயலாளர், கிருஷ்ணமூர்த்தி, பல்லடம் கிழக்கு ஒன்றிய செயலாளர், சோமசுந்தரம், மாநகர அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, கவுன்சிலர்கள் ராதாகிருஷ்ணன், பி.ஆர். செந்தில்குமார், இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜ், நிர்வாகிகள் திலக்ராஜ், சிவபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, முத்தம்மாள் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

The post எம்எல்ஏ செல்வராஜ் தாயார் முத்தம்மாளுக்கு 2ம் ஆண்டு நினைவு தினம் appeared first on Dinakaran.

Tags : MLA ,Selvaraj ,Muthammal ,Tirupur ,DMK ,
× RELATED சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை...