×

வரத்து குறைவு காரணமாக கோயம்பேட்டில் காய்கறிகள் விலை ஏறுமுகம்

சென்னை: வரத்து குறைவு காரணமாக, கோயம்பேட்டில் அனைத்து காய்கறிகளின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு, தமிழகம் மற்றும் கேரளா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து காய்கறிகள் வருகின்றன. இவற்றின் வரத்து தொடர்ந்து குறைந்துள்ளதால் அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. நேற்று காலை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.150க்கும், இஞ்சி ரூ.280க்கும், பச்சை பட்டாணி ரூ.200க்கும் கத்தரிக்காய் ரூ.70க்கும், பீன்ஸ் ரூ.110க்கும் விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிலோ தக்காளி 100க்கும் உருளைக்கிழங்கு 35க்கும் முள்ளங்கி 40க்கும் முட்டைகோஸ் 20க்கும் காராமணி 60க்கும் சவ்சவ் 25க்கும் புடலங்காய் 30, சுரக்காய் 35க்கும் வெண்டைக்காய் 50க்கும் முருங்கைக்காய் 30க்கும் சேனை கிழங்கு 40க்கும் காலிபிளவர் 30க்கும் அவரைக்காய் 80க்கும் பீர்க்கங்காய் 50க்கும் நூக்கல் 35க்கும் கோவக்காய் 30க்கும் கொத்தவரங்காய் 40க்கும் விற்பனையானது. சென்னை புறநகர் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.140ல் இருந்து ரூ.150க்கும், இஞ்சி ரூ.310க்கும், பீன்ஸ் ரூ.140க்கும், பட்டாணி ரூ.220க்கும், பச்சை மிளகாய் ரூ.110க்கும் வண்ண குடமிளகாய் ரூ.240க்கும் விற்பனை செய்யப்பட்டது.

* விலை உயர்வுக்கு காரணம் என்ன?
காய்கறிகள் விலை உயர்வு குறித்து வியாபாரிகள் கூறும்போது, ‘‘வரத்து குறைவால் அனைத்து காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை சின்ன வெங்காயம், பீன்ஸ், கத்தரிக்காய், இஞ்சி, பச்சை பட்டாணி விலை அதிகரித்து உள்ளது. தவறான செய்தியை வியாபாரிகளிடம் சேர்ப்பதால் வரும் விளைவுகளே இந்த விலை உயர்வுக்கு காரணம். கோயம்பேடு மார்க்கெட்டில், அனைத்து காய்கறிகளின் விலையை மார்க்கெட்டில் உள்ள சங்கத்தின் தலைவர்கள் மூலம் கேட்டு தெரிந்துகொண்டு, உண்மையான செய்தியை மக்களிடம் சேர்க்கவேண்டும்’’ என்றனர்.

The post வரத்து குறைவு காரணமாக கோயம்பேட்டில் காய்கறிகள் விலை ஏறுமுகம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,CHENNAI ,Koyambedu ,Tamil Nadu ,Koyambed ,Dinakaran ,
× RELATED கோவை விமான நிலையத்துக்கு மின்னஞ்சல்...